மதுரைத் தியாகராசர் கல்லூரியிலும், மதுரை கமராசர் பல்கலைக்கழகத் தமிழியற் துறையிலும் தமிழ் படித்து எம்.ஏ, எம்.ஃபில், பிஎச்.டி பட்டங்களைப் பெற்றவர். 1991 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சிப் பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு உத்திக்காக பி.பி.சி வானொலியாரால் தேர்வு செய்யப்பெற்று லண்டன் சென்று பயிற்சி பெற்றுத் திரும்பியவர். அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FETNA) அழைப்பின்பேரில் அமெரிக்கா சென்று பல்வேறு தமிழ் அமைப்புக்களில் தமிழ்ப்பொழிவுகள் ஆற்றிய பெருமைக்குரியவர்.