இளங்கலைத் தமிழ் இலக்கியப் படிப்பை ஈரோடு சிக்கய நாயக்கர் கல்லூரியிலும் மொழியியல் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திலும், ஆய்வியல் நிறைஞர் படிப்பை ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்திலும் முடித்துவிட்டு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றி மைசூர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் பணி, தமிழ்மொழி, இலக்கியம், கலை, சமூகம் ஆகியன பற்றிய 'பாஷா மந்தாகினி' எனும் காட்சிப்பட ஆவணத் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைப்பாளர் பணி, இவற்றின் தொடர்ச்சியாகச் செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றித் தற்போது கோவை பாரதியார் பல்கலைக்கழக மொழியியல்துறையில் விரிவுரையாளராகப்பணியாற்றி வருகிறார்.