அரியலூர் மாவட்டம் செந்துரை வட்டத்திலுள்ள உஞ்சினி என்ற ஊரைச்சேர்ந்தவர். உழவர் குடியில் பிறந்த இவர் தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து முறையாகக் கல்வி பயின்று முனைவர் பட்டம் வரையில் பல பட்டங்களைப் பெற்றுள்ளார். முனைவர் பொற்கோ அவர்களின் வழிகாட்டலில் தனது எம்.ஃபில், முனைவர் பட்ட ஆய்வுகளைச் செய்துள்ளார். மொழி ஆராய்ச்சியில் தீவிர கவனம் செலுத்திவரும் இவர் கதை, கவிதை, கட்டுரை, ஆய்வுக்கட்டுரை முதலான எழுத்துப்பணிகளைச் செய்து வருகிறார். இவர் தற்போது முதுகலைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.