கவிமணி வாழ்ந்த தேரூர் மண்ணில் பிறந்தவர். நாகர் கோவில்தெ.இ.இந்துக்கல்லூரித் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். முதுகலைப் பட்டப் படிப்பிற்காக புறநானூற்றுப் பாடாண்திணைப் பாடல்களையும, ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்பிற்காக நாஞ்சில் நாட்டு வேளாளர் விடுகதைகளையும் ஆய்வு செய்துள்ளார். "வேளளர் வாழ்வியல் நம்பிக்கைகள் (நாஞ்சில் நாடு)" என்ம் தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். இவ்வாய்வேடானது இரு நூல்களாக வெளிவந்துள்ளது. நாட்டுப்புற வழக்காற்றியல் சார்ந்த, வேளாளர் வாழ்வியல் தொடர்பான ஆசிரியரின் பதினைந்து ஆய்வுக் கட்டுரைகள் நூலாக்கம் பெற்றுள்ளன.