பழனி அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தமிழ் எம்.ஏ தேர்வில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று பொற்பதக்கம் வாங்கியுள்ளார். ம.லெ.தங்கப்பா கவிதைகளை ஆய்வு செய்து எம்.ஃபில் பட்டமும் தமிழ்க் கவிதைகளில் புனைவியல் என்ற தலைப்பில் ஆய்வு செய்து, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். பல மாணவர்கள் இவரிடம் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். தேசிய அளவிலும் மாநில அளவிலும் நடைபெற்ற பல்வேறு தமிழ் இலக்கிய கருத்தரங்குகளில் பங்கு கொண்டு இதுவரைக்கும் நூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பெண்ணியம், தலித்தியம், நாட்டுப்புறவியல், மக்கள் தகவலியல், பின் நவீனத்துவம், நட்பியல், புனைவியல் ஆகிய துறைகளில் தனித்த சிந்தனைகளுடன் தொடர்ந்து ஏழு நூற்களை வெளியிட்டுள்ளார்.