சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர். காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பயின்றவர். மீனாட்சி கல்லூரியில் முதுகலைப்பட்டமும் சென்னைப் பல்கலைக்கழக தமிழிலக்கியத்துறையில் சிலப்பதிகாரத்தில் மனித உறவுகள் என்ற தலைப்பில் எம்.ஃபில் பட்டமும் கம்பராமாயணத்தில் கட்டமைப்பு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். கல்லூரிப் பேராசிரியையாக பணியாற்றும் இவர் சென்னைப் பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினராகவும் செய்லபடுகிறார். தற்போது பொன்னேரியில் உள்ள ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றுகிறார். பல்வேறு கருத்தரங்கங்களில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி வருகிறார்.