கடலூர் மாவட்டம் பாளையஞ் சேர்ந்தங்குடி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். குடந்தை மகளிர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இளங்கலையையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலை மற்றும் பி.எட் பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் வீ.உண்ணாமலை அவர்கள் மேற்பார்வையில் "தென்கச்சி கோ.சுவாமிநாதனின் வாரம் ஒரு தகவல் - ஓர் ஆய்வு" என்ற தலைப்பில் எம்.ஃபில் பட்டம் பெற்றவர். நாட்டுப்புறவியல் துறையில் சான்றிதழ் படிப்பு பயின்றவர். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், இக்கால இலக்கியம் ஆகிய துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். .