மா.அபிராமி (1971.12.18) கடலூர் மாவட்டம் கரையேறவிட்ட குப்பத்தைச் சேர்ந்தவர். கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் தமிழில் பி.ஏ பட்டமும், எம்.ஏ பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். 2002 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் நட்டுப் புறவியலிலும், சைவ சித்தாந்தத்திலும் பட்டயப் படிப்பையும் முடித்துள்ளார். தற்போது சென்னைஆவடியில் உள்ள வேல் ஸ்ரீ அரங்கா சங்கு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணி புரிகிறார். நான்கு நூல்களை எழுதியுள்ளார்.