20.07.1936 சேலம் மாவட்டம் உலகப்பம்பாளையம் அருகில் உள்ள கவுண்டம் பாளையத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சென்னை லயலோக் கல்லூரியின் பழைய மாணவர். திரு.வி.க வின் சொற்பொழிவிகளால் தமிழார்வம் மிக்கவராக மாறினார். அண்ணாமலைப் கல்கலைக் கழகத்தில் தமிழ் சிறப்பு வகுப்பில் கல்வி கற்றார். 1958 இல் M.A பட்டம் பெற்றார். மாணவராக இருந்தபோதே இரண்டு தங்கப் பதக்கம் உட்பட 6 ஆராய்ச்சிப் பரிசுகளைப் பெற்றார். சென்னை கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் நூலகராகப் பணி புரிந்தார்.செந்தமிழ்ச் செல்வியில் பல தலையங்கக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 26 ஆண்டுகள் ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் விரிவுரையாளராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, யேர்மன், இந்தி, வட மொழி, தெலிங்கு, கன்னடம், மளையாளம், ருசியன் ஆகிய 10 மொழிகளைக் கற்றுள்ளார். உலகிலேயே அதிகமான அகராதிகளை எழுதியவர் என்ற பெருமைக்குரியவர். இதுவரையில் 205 நூல்களை எழுதியுள்ளார் அவற்றில் 115 நூல் அகராதி வடிவில் உள்ளன. பன்மொழிப் புலவர் என்று அறியப்படுபவர். பல்வேறு சிறப்புப் பட்டங்களையும் பெற்றுள்ளார்.