ஆரம்ப காலக் கையெழுத்துப் பிரதிகளில் பயன்படுத்தப்பட்ட எழுதுமை. ஆமணக்கெண்ணெயில் பஞ்சுத்திரியை எரித்துக் கிடைக்கும் கரியும், செடி கொடிகளின் பதப்படுத்தப்பட்ட சாறுகளும் வேலம்பிசினுடன் கலக்கப்பட்டு் தயாரிக்கப்பட்டது. வட இந்தியாவில் பீர்ச்சமரப்பட்டையைக் கருக்கி பசுவின் சாணத்துடன் சேர்த்தும் எழுதப் பயன்படுத்தியுள்ளனர். இவை நிரந்தரத்தன்மை கொண்டதாகவும் ஔித்தாக்கத்திற்கு மங்கிப்போகாத தன்மை கொண்டதாகவும் இருந்தது. பிற்காலத்தில் ஓக் மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மையே பயன்படுத்தப்பட்டது. ஓக் மரத்து மையில் சல்பேற் உள்ளடங்கியிருப்பதுடன் இது சல்பேரிக் அமிலத்தை உருவாக்கி தாளிலுள்ள விம்பங்களை எரித்துவிடுகின்றது 1945ம் ஆண்டு தொடக்கம் இரசாயன முறையில் தயாரிக்கப்படும் சாயத்தை அடிப்படையாகக் கொண்ட மையே பயன்படுத்தப்பட்டதுடன் நூலக சேகரிப்புக்களில் கணிசமானவை சாயப்பொருள் கொண்டு தயாரிக்கப்பட்டவையாகும். இரசாயனக் கலப்புள்ள மையானது கறுப்பு எழுத்துக்களை மண்ணிறமாக மாற்றி பின் முற்றாகவே அழித்துவிடுகிறது. சாயப்பொருள் கொண்டு எழுதப்படும் எழுத்துகளில் சில நீரில் அழிவனவாகவும் பல ஔிப்பாதிப்பிற்குட்படுப வையாகவும் உள்ளன. (சம்பந்தன்,ம).
மேலும் பார்க்க < > அச்சிடுதல் உபகரணங்கள்