மையிடப்பட்ட அச்சுத்தகடுகள் அச்சுருக்கள் அல்லது அச்சு எழுத்துக்களிலிருந்து, தாள்களிலோ அல்லது ஏனைய சாதனங்களிலோ பதிப்புக்களை உருவாக்குகின்ற பொறிகள். அச்சுப் பொறிகள் பொதுவாக *தட்டை அச்சுப் பொறி, *உருளி அச்சுப் பொறி, *சுழல் அச்சுப் பொறி என மூன்று வகைப்படும். முதன்முதலில் அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்டது மர அச்சுப்பொறியாகும். இது திருகு முறையால் மேலிருந்து கீழே அழுத்தப்பட்டுப் பதிவு எடுக்கப் பயன்பட்டு வந்தது. அடுத்து 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மரத்தை விடக் கனமானதும் நீடித்து உழைக்கக்கூடியதுமான செம்பினாலான திருகுமுறை உண்டாக்கப்பட்டது. 1620இல் நழுவிப் போகும் தட்டு முறையில் சில மாறுதல்களுடன் சக்கர இணைப்புத் தண்டையும் தோல் வாரையும் திருகுமுறைக்குப் பதிலாக இரும்பு நெம்பியையும் பயன்படுத்தி யோன்ஸ் பிளே (Janssz Blaew) என்ற டச்சுக்காரர் புதிய அச்சுப்பொறியை உருவாக்கினார். 1798இல் ஸ்ரான்ஹோப் (Lord Stanhope) என்பவரால் எல்லாப்பாகமும் இரும்பினாலான அச்சுப் பொறி உருவாக்கப்பட்டது. 1816இல் ஜோர்ஜ் கிளைமர் (George Climer) என்பவர் பலவித நெம்பிகளைப் பயன்படுத்தி அச்சுப் பொறியை உருவாக்கினார். 1862இல் G.P. Gorden என்பவரால் அச்சிடப்படும் இடமும் தட்டும் தட்டையாக அமைக்கப்பட்டிருந்த தட்டை அச்சுப் பொறி உருவாக்கப்பட்டது. 1790இல் நிக்கலஸ் என்பவரால் உருளி அச்சுப் பொறி அமைக்கப்பட்டது. எட்டு உருளைகள் கொண்ட முதலாவது உருளி அச்சுப் பொறி து. றயடவநச என்பவரால் உருவாக்கப்பட்டது. 1875இல் ஆவியால் இயங்கும் பொறி (gas engine) அறிமுகப்படுத்தப்பட்டது. *தனி எழுத்து அச்சுப்பொறி, *மறு தோன்றி கல் அச்சுப்பொறி, *குடைவு அச்சுப் பொறி *திரைமுறை அச்சுப் பொறி என நான்கு வகையான அச்சுப்பொறிகள் அல்லது அச்சடிப்பு அமைப்புக்கள் நடைமுறையில் உள்ளன. *அச்சுருப் பதிப்புபொறி, *எழுத்தச்சுப் பொறி, *ஔிப்பட அச்சுப் பொறி, *செதுக்கு அச்சுப் பொறி, *பொறிக்கும் பொறி, *நிலைக்குத்தச்சுப் பொறி.