கணினி பயன்பாட்டில் எம்எஸ் ஆபீஸ் தொகுப்பின் முக்கியத்துவம் மிகவும் குறிப்ப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. குறிப்பாக இதில் உள்ள வேர்டு, எக்ஸெல் மற்றும் பவர்பாயின்ட் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்றே கூறலாம்.
இந்தப் புத்தகம் எம்எஸ் பவர்பாயின்ட் பற்றியதாகும். இது பார்ப்பதற்கு மட்டுமல்லாமல், அடிப்படை செயல்களைச் செய்வதற்கும் மிகவும் எளிமையானதாகவே உள்ளது. ஆனால் நடைமுறையில் இதில் உள்ள வசதிகளை பயன்படுத்துவது மிகவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக இதில் உள்ள இன்சர்ட் பகுதியின் செயல்பாடு மிகவும் அதிகமாகும். ஆனால் வெறும் படங்களை உள்ளே கொண்டுவருவதற்கு மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது.
வரைகலை என்று பார்த்தால் இதில் உள்ள அனிமேஷன், தீம்ஸ், பேக்கிரவுண்ட்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்க பகுதிகளாகும். இதில் உருவாக்கப்படும் காட்சிப்படங்களை பயன்படுத்தும் விரிவுரையாளரின் திறமையைக் காட்டும் விதமாகக் கொடுக்கப்பட்டுள்ளதே ஆக்சன் பட்டன்கள் என்று கூறலாம்.
இந்த நூலில் ஒவ்வொரு கட்டளையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இத்துடன் கொடுக்கப்படுகின்ற குறுவட்டில் செயல்முறை பயிற்சிக்காக பல கோப்புகள் தரப்பட்டுள்ளன.