தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பேஜ் மேக்கர் 7.0
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : நான்காம் பதிப்பு
ஆசிரியர் :
வீரநாதன், ஜெveeranathan@yahoo.com
பதிப்பகம் : பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
Telephone : 9142222323228
விலை : 150.00
புத்தகப் பிரிவு : கணினி
பக்கங்கள் : 200
ISBN : 9788190831857
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
புத்தக அறிமுகம் :

டெஸ்க் டாப் பப்ளிஷர் என்றழைக்கப்பட்ட கணினிகள் மூலமாக புத்தக வடிவமைப்பு உள்ளிட்ட பதிப்பக வேலைகளைச் செய்வதற்காக அல்டஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது பேஜ்மேக்கர் என்ற மென்பொருளாகும். விண்டோஸில் செயல்படும் விதமாக வெளியிடப்பட்ட 4வது பதிப்பிற்குப் பிறகு இந்த மென்பொருளை அடோபி நிறுவனம் கையகப்படுத்தி பேஜ்மேக்கர் 5.0 பதிப்பை வெளியிட்டது.

எளிமையான முறையில் கருவிகளும் கட்டளைகளும் தரப்பட்டிருந்தன. எனினும் வரைகலையைச் செய்வது என்பது முற்றிலும் இயலாததாகவே இருந்தது. எடுத்துக்காட்டாக ஒரு அரைவட்டமாக கோடு வரைவது என்பது கூட பேஜ்மேக்கரில் இயலாது என்ற நிலை இருந்தது. ஆனால் எழுத்துத் தொடர்பான வேலைகளை மிகவும் விரைவாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க முடிந்தது.

இதே நிலையில் பேஜ்மேக்கர் 7.1வது பதிப்பு வரையிலும் அடோபி நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டது. ஆனால் அதன்பிறகு அதனை வெளியிடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். இதனால் பேஜ்மேக்கர் என்பது தற்போது மிகவும் குறைவான அளவே பயன்பாட்டில் உள்ளது.

கணினியை இயக்கச் செய்யும் மென்பொருளான விண்டோஸின் புதிய பதிப்புகளில் செயல்படும் வகையில் பிற மென்பொருட்கள் உயர்வுபடுத்தப்பட்ட பதிப்பாக வெளிவருகின்ற வேளையில் பேஜ்மேக்கர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் விண்டோஸ் 7வது பதிப்பில் இது முழுமையாக இயங்குவதில்லை. பல்வேறு தொல்லைகளைச் சந்திக்கின்றனர்.

பழைய கணினிகளில், விண்டோஸ் 95 முதல் விண்டோஸ் எக்ஸ்பீ வரையிலும் உள்ளவற்றில் மட்டும் பேஜ்மேக்கர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

எனவே இந்த மென்பொருளை புதிதாகப் பழகத் தொடங்குவது என்பது தேவையற்ற ஒன்றாகும். ஏற்கனவே இதனை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களும் விரைவில் இதிலிருந்து வெளியேறுவது நல்லதாகும்.

இந்த பேஜ்மேக்கருக்கு மாற்றாக உருவாக்கப்பட்டு புழக்கத்தில் உள்ளதே இன்டிசைன் என்ற மென்பொருளாகும். இதுவும் அடோபி நிறுவனத்தின் தயாரிப்பே.

கணினி வரைகலைப் பகுதிக்காக ஆசிரியர் ஜெ. வீரநாதன் தமிழில் எழுதிய முதல் புத்தகம் இதுவேயாகும். 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan