இணையம் தொடர்பான பல்வேறு தகவல்களை இந்தப் புத்தகத்தில் தொகுத்துக் கொடுக்க முயற்சித்துள்ளோம். இணையம் என்றால் என்ன, இணைய இணைப்பு, துவக்கும் முறை, வலைதள முகவரி, தேடுபொறிகள், மின்னஞ்சல், ஃபேஸ்புக், வலைப்பதிவுகள், பதிவிறக்கம் செய்யும் வழிமுறை, இணையம் வழியே கல்வி, இணைய வாணிபம், விக்கிப்பீடியா, இணையத்தில் தொல்லைகள் - என்பன உள்ளிட்ட 28 தலைப்புகளில் இணையம் தொடர்பான பெரும்பாலான செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன.
எல்லா பகுதிகளிலும் தேவையான படங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால், இணைய இணைப்பு இல்லாமலேயேகூட இந்தப் புத்தகத்தைப் படித்து புரிந்து கொள்ளலாம்; இணையத் தொடர்பை துவக்கி நேரடியாக செயல்படலாம்.
துவக்க நிலையில் உள்ளவர்கள் மட்டுமின்றி இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களும் அறிந்து கொள்ள நிறைய செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை பவித்ரம் அறக்கட்டளை வழங்கிய 2011ம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் நூல் பரிசினை இந்தப் புத்தகம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.