அடோபி நிறுவனத்தின் இந்த மென்பொருளின் பயன்பாடு பல துறைகளுக்கும் அடிப்படையாக உள்ளது. அச்சுத்துறை, ஒளிபடத் துறை, பதாகைகள் வடிவமைப்பு, புத்தக அட்டை வடிவமைப்பு, இணையதளப் பக்க வடிவமைப்பு, டிஜிட்டல் டிராயிங், சலனப்பட உருவாக்கம் - என்று கணினி வரைகலையை பயன்படுத்தும் எல்லா துறையினருக்கும் பிடித்தமான ஒரு மென்பொருள் இந்த போட்டோஷாப் ஒன்று மட்டுமேயாகும்.
நமது பயிலகம் வாயிலாக முதலில் போட்டோஷாப் சிஎஸ்2 பதிப்பிற்கான விரிவான புத்தகம் வெளியிடப்பட்டது. தற்போது சிஎஸ்6 பதிப்பிற்கான புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் மட்டுமல்லாது உலகளவில் ஆங்கில மொழிக்கு அடுத்தபடியாக தமிழில் மட்டுமே இவ்வளவு விரிவான புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
போட்டோஷாப் மென்பொருளின் கருவிகள், கட்டளைகள் அனைத்தும் எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இடத்திலும் போட்டோஷாப்பின் டயலாக் பாக்ஸ்கள் உட்பட ஏராளமான படங்களுடன் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், கணினி இல்லாத நிலையிலும் புத்தகத்தைப் படித்தால் இந்த மென்பொருளின் செயல்பாட்டை புரிந்து கொள்ள முடிகிறது.
வண்ணம், ரெசல்யூஷன், ஆக்சன்ஸ், ட்யூடோன் என்பன பற்றியும் தனியான கட்டுரைகளின் மூலம் விளக்கம் தரப்பட்டுள்ளது. மேலும், சலனப்படம் உருவாக்குதல், கருப்பு வெள்ளை புகைப்படத்தை வண்ணத்திற்கு மாற்றுதல், சில நிமிடங்களில் ஏராளமான அடையாள அட்டைகளை உருவாக்குதல் என்பன போன்ற செயல்பாடுகளுக்கும் தனியான கட்டுரைகள் தரப்பட்டுள்ளன.