தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


செல்பேசி பழுது நீக்குதல்
பதிப்பு ஆண்டு : 2010
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
வீரநாதன், ஜெveeranathan@yahoo.com
பதிப்பகம் : பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
Telephone : 9142222323228
விலை : 350.00
புத்தகப் பிரிவு : கணினி
பக்கங்கள் : 220
ISBN : 9789380324081
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
புத்தக அறிமுகம் :

செல்பேசி தொழில்நுட்பம் என்பது மிக வேகமாக வளர்ந்து வருவதுடன், விரைவாக மாற்றங்களைப் பெற்றுக் கொண்டுள்ள ஒரு பகுதியாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். செல்பேசி பயன்பாடு அதிகரித்து வரும் அதே நேரத்தில் அதன் பழுதை நீக்குவதற்காக சேவை மையங்களை நாடுவதும் அதிகரித்து வருகிறது. இந்தியக் கலாச்சாரத்தில் மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் என்பது தொடர்ந்தே வருவதால், பழுதடைந்தாலும் இந்த செல்பேசிகள் உடனடியாகத் தூக்கி எறியப்படுவது இல்லை. ஒரு முறையேனும் பழுது நீக்கத் தரப்படுகின்றன. அந்த வகையில் செல்பேசி பழுது நீக்குதல் என்பது இந்தியாவில் மிகப் பெரிய சந்தையைக் கொண்டுள்ளது. இதில் சிறப்பாகவும் முழுமையாகவும் பயிற்சி எடுத்துக் கொண்டு பணிபுரிந்தால் நல்ல வளர்ச்சி காணலாம்.

செல்பேசி பழுது நீக்குதலை பயிலுவதற்காக விரிவான புத்தகமாக தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறையாகும். செல்பேசி தொழில்நுட்பம், மின்னணு தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையையும் தெளிவாக இந்த நூலில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

செல்பேசியை பிரித்தல் மற்றும் இணைத்தல்,பாகங்களை அறிந்து கொள்ளுதல், மின்சுற்று வரிப்படம், மல்டி மீட்டர், பிரித்தலும் பற்றவைத்தலும், ஜம்பர், பழுதுகளைக் கண்டறிதல், சரிசெய்தல், நோக்கியா 3310 வகை செல்பேசியின் பாகங்கள் மற்றும் தொழில்நுட்பச் சொற்கள் உள்ளிட்ட 32 தலைப்புகளில் விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் தேவையான வரிப்படங்கள், ஒளிப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் விளக்கங்களை புரிந்து கொள்ளுவது எளிதாகிறது.

எழுத்துக்களில் உள்ள சில தகவல்களை வீடியோ படமாக ஒரு குறுவட்டில் பதிந்தும் கொடுத்துள்ளோம். இந்தக் குறுவட்டை கணினி அல்லது தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைக்கப்பட்டுள்ள டிவிடி பிளேயர் மூலமாக பார்த்துக் கொள்ளலாம். விளக்கம் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan