தற்போது, கணினி மயமாக அச்சகங்கள் செயல்பட்டு வரும் காலகட்டமாக உள்ளது. ஒரே இடத்தில் அனைத்து அச்சுப் பணிகளும் செய்துவந்தது மறைந்து, வரைகலை வடிவமைப்பு, அச்சிடுதல், புத்தகம் கட்டுதல் என மூன்று தனித்தனி பிரிவுகளாகவும் பிரிந்து போயுள்ளன. ஒவ்வொரு இடத்திலும் மாறுபட்ட முதலீடுகள்; ஆட்களின் எண்ணிக்கை; செயல்பாடுகள் - என்று நிலவுகின்ற இந்நாட்களில் விலை நிர்ணயித்து பட்டியல் வெளியிடுவது முற்றிலும் சாத்தியமற்றதாகவே உள்ளது. எனினும் அவரவருக்கு ஏற்ற வகையிலாவது விலை நிர்ணயிப்பது பற்றிய தெளிவான முயற்சியை மேற்கொள்ளலாம்.
இதற்கு முதலாவது தேவை, சரியான அச்சக மேலாண்மை என்பதாகும். இந்தப் புத்தகத்தில் அச்சக மேலாண்மை என்பது பற்றியும், அதன் தொடர்ச்சியாக விலை நிர்ணயிக்கும் வழிபற்றியும் நமது பட்டறிவில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்திகளை பகிர்ந்து கொள்ளுகின்றோம்.