நகிப் மஹ்ஃபூஸ், சிவில் சேவை அதிகாரியாக பணியாற்றிய போதிலும், தமது பதினேழாவது வயதிலேயே படைப்பிலக்கித்துறையினால் ஈர்க்கப்பட்டவர். தற்கால அரபு இலக்கித்தில் அவர் புகுத்திய பரிசோதனை எழுத்துவகை புதிய இரத்தம் பாச்சியுள்ளதாக அரபு இலக்கிய விமர்சகர்கள் கருதிகிறார்கள்.
மிரமார் அரபு மொழியின் மரபு வழிவந்த ஓர் இலக்கிய வடிவத்திலிருந்து உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, சென்ற நூற்றாண்டின் அறுபதுகளிலே நிலவிய எகிப்திய வாழ்க்கையைப் பற்றிய சமூக வரலாற்றுக் நிகழ்வுகளையும் வாசகனுக்குக் காட்சிப்படுத்த்துகிறார்.