ஆபிரிக்க எழுத்தாளர்களிலேயே மிக முக்கியமான படைப்பாளி சீனு ஆச்சுபே ( Chinua Achebe ). அவரைத் தவிர்த்து ஆபிரிக்க கண்டத்தின் இலக்கிய வரலாற்றினை எழுதுதல் சாத்தியமல்ல. அங்கு நடைபெற்ற முதலாவது இராணுவப் புரட்சியின் பின்னர் வந்ததினால் மக்களின் மனிதன் என்ற இந்நாவல் நைஜீரிய மக்களிடையே ஒரு பரபரப்பினை ஏற்படுத்தியது. அரசியல்வாதிகளுடைய ஊழலை மிக நுட்பமாக நையாண்டி செய்தது இதன் படைப்புத்திறன்.