Camara Laye எழுதியுள்ள கறுப்புக் குழந்தை அபூர்வமானதும், அரியதுமாகும். வறுமை, தெரிந்துகொள்ளும் ஆர்வம், திடமான நோக்கம், தேடல் மனோபாவம் ஆகியவற்றை வசப்படுத்திய மிகத் திறமையான மானுடவியல் விஞ்ஞானிகளாலே கூட இந்த விசேஷ தரவுகளைக் கண்டறிந்திருக்கமுடியாது. சுவையே ஒழுங்குபடுத்திற்று, மானுட உள்ளம் ஒன்று, இதற்கு உயிரும் பாசக் கததகதப்பும் அருளிற்று விளைவான இக்கலாபடைப்பு அதிசயமாக கொள்ளப்படாவிட்டாலும் என்றென்றும் ஆசிசரியமானதாகவே காட்சிதரும்.