பொருளடக்கம்
-
ஆறுமுக நாவலர்
-
சுவாமி விபுலானந்தர்
-
பாவலர் துரையப்பாப் பிள்ளை
-
பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை
-
தவத்திரு தனிநாயக அடிகள்
-
பேராசிரியர் பேரம்பலம் கனகசபாபதி
-
பேராசிரியர்.க.கைலாசபதி
-
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
-
பேராசிரியர் அ.சின்னத்தம்பி
-
புலவர் சிவங்.கருணாலய பாண்டியனார்
இக்கட்டுரைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காக எழுதப்பட்டவை. கட்டுரைகளாக, முன்னுரைகளாக, அணிந்துரைகளாக எழுதப்பட்டவற்றை தொகுப்பாளர்கள் தி.கமலநாதன், தெ.மதுசூதனன் ஓரிடமாகத் தொகுத்துத் தந்துள்ளார்கள். தொகுப்பாளர்கள் காலத்தின் தேவை கருதி, பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களுக்குப் பெருமை தேடும் முறையிலும் தமிழ்ப் பெரியார்களை இளந்தலைமுறையினருக்கு மீள் அறிமுகம் செய்யும் நோக்கிலும் தொகுத்துத் தந்துள்ளனர்.
இந்நூலில் ஆராயப்படும் தமிழ்ப் பெரியார்கள் தமிழ் மக்களால் மறக்கப்பட முடியாதவர்கள். தமிழர் வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் பிரதான இடத்தை வகிக்கும் அளவுக்கு, வேறுபட்ட முறையில் பல்வகைப் பங்களிப்புகளைச் செய்து தமது பன்முக ஆளுமையை வெளியிட்டவர்கள்.