நேர்காணல்கள் என்பது பொதுவாக பத்திரிகைகளில் மட்டுமே வெளிவரும். நேர்காணல்கள் இலக்கிய அந்தஸ்து பெறுவது ஆபூர்வம். சுபமங்களா ஏட்டில் வந்த நேர்காணல்கள் பெருந்தொகுப்பாக வெளிவந்து இன்னும் வலுவாய் பேசிக்கொண்டிருக்கின்றன. தற்போது நேர் காணலும் ஒரு இலக்கிய வகையே என்று உறுதியுடன் முத்தையா வெள்ளையன் மேற்கொண்ட நேர்காணல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மாத்தளை சோமு, ச.அ.டேவிட், ஆஷாபாரதி, கார்த்திகேசு சிவத்தம்பி, மௌனகுரு, சுப.வீரபாண்டி யன், யூமா வாசுகி, ஆ.சிவ சுப்பிரமணியன், சிந்தாமணி, அ.வெண்ணிலா ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. “வெவ்வேறு கருத்தாக்கத் தளத்தில் நின்று செயல்படும் இவர்களிடம் முத்தையா வெள்ளையன் கேள்விகளை வைத்த முறையில் அவருடைய அரசியல் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு எதிர்நிலை எடுத்து பதில் சொல்வோரிடமுள்ள முரணை வெளிக்கொணருகிறார் என்கிறார் முன்னுரையில் ராமானுஜம்.