செந்திநாத ஐயர் ஆறுமுகநாவலர் வழியில் கட்டுரைகளும், கண்டனங்களும் எழுதிப் புகழ் பெற்றவர். இலங்கை நேசன் பத்திரிகையில் இவருடைய கட்டுரைகளை பொதுமக்கள் வெகுவாக விரும்பிப் படித்தனர். தமிழ்நாட்டில் 1904 ஆம் ஆண்டு அருட்பா மருட்பா என்ற வழக்கில் நா.கதிரைவேற்பிள்ளைக்கு ஆதரவாக நின்றவர். சமயத் தொண்டாற்றி பல நூல்களைப் பதிப்பித்தவர். இவரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் கூறும் நூல்.
சி.கணேசையர் எழுதிய ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் என்ற நூலில் உள்ள காசிவாசி செந்திநாதையர் என்னும் கட்டுரையும், க.சி.குலரத்தினம் எழுதிய சைவம் வளர்த்த சான்றோர்கள் : மகான் க.சி.செந்தி நாத ஐயர் ஆகிய நூல்களினூடாக இச்சிறுநூல் உருவாக்கப்பட்டுள்ளது.
பொருளடக்கம்
-
தோற்றமும் இளமைக்காலமும்
-
திருமணமும் கல்வி யாத்திரையும்
-
மீண்டும் தமிழ்நாட்டில்
-
கந்த புராண நவநீதம்
-
சைவசித்தாந்த பாடம்
-
காசிவாசி
-
தமிழ்நாட்டிற் பணி
-
நூல்கள் இரண்டு
-
சித்தாந்த சமயப் பங்களிப்பும் ஆய்வு அறிவும்
-
பின்னிணைப்புகள்
-
உசாத்துணை.