தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தொட்டிக் கட்டு வீடு
பதிப்பு ஆண்டு : 1993
பதிப்பு : முதற் பதிப்பு (1993)
ஆசிரியர் :
வடிவேலன், இரா
பதிப்பகம் : அருணோதயம்
விலை : 40
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 292
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
இப்புதினம் கொங்கு நாட்டுச் சூழலில் பிறந்தது. கொஞ்சுந் தமிழையே பாத்திரங்கள் பேசுகின்றன. எல்லாக் கிராமங்களிலும் உள்ள போராட்டங்கள் போலவே இங்கும் அவை உலா வருகின்றன. அந்த முரண் தொடைகளே படைப்பின் ஆணி வேர்கள். கொங்கு நாட்டு வேளாளர் வாழ்வின் உயரிய பண்புகள், பழக்க வழக்கங்கள், உணர்ச்சிச் சிதறல்கள், வறட்டுக் கௌரவங்ள், போட்டிகள் - பொறாமைகள் இவையே இப்புதினத்தை இயக்குகின்றன. இத் 'தொட்டிக் கட்டு வீட்டின்' கதை நாயகி மயிலாத்தாள். அவள் ஒரு கவரிமான்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan