சிறந்த புலவரும் செங்கவிச் சுடருமான 'ஓடை' இரா.வடிவேலன் அவர்கள் கோவை மாவட்டத்து ஈரோடு வட்த்துப் பேரோடு எனும் சிறுறூரில் 1936.06.20 இல் பிறந்தவர். சித்தோட்டில் உயர்கல்வியும்,ஈரோட்டில் பயிற்சியும் பெற்று 1957 இல் தனது ஆசிரியப் பணியினைத் தொடங்கினார். 1962 தமிழாசிரியரானார். முதுகலைப் பட்டமும் முதுகலை ஆசிரியப் பயிற்சியும் பெற்றுள்ளார். கவிஞர் புதுமை நோக்கும், முற்போக்குக் கொள்கையும் கொண்டவர். "மாறுவது சமுதாய மரபு இல்லையெனில் மாற்றுவது படைப்பாளர் மரபு" எனும் கொள்கையினர். இவரது படைப்புக்களில் எளிமையின்பம், ஆற்று நடை, அணங்கின் ஒயில், உணர்ச்சி ஊற்று, உவமை, உருவக மணி முத்தாரங்களைக் காணலாம். ஈரோடு நகரில் வாழ்ந்து வரும் கவிஞர் அவர்கள் தமிழ் இலக்கியப்பேரவை, திருக்குறள் பேரவை, கவிஞர் மன்றம், குறளயம், மற்றுத் தமிழகத் தமிழாசிரியர்கள் கழகப் பெரியார் மாவட்டத் தலமையேற்று 10 ஆண்டுகளாளகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.