தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சந்திப்பு
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
நாராயணன், மை.பாkkbooks07@rediffmail.com
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
விலை : 70
புத்தகப் பிரிவு : நேர்காணல்கள்
பக்கங்கள் : 128
புத்தக அறிமுகம் :
அரசியல் அரங்கம் விசித்திரங்களின் வேதாள உலகம். அங்கே சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்ய நிருபர்கள்தான் நினைத்ததை சாதிக்க முடியும். அந்த உலகின் இரும்புக் கதவை அன்பின் சாவியால் திறந்து புதிர்களையெல்லாம் பூங்கொத்தாக வாங்கி வந்தவர் மைபா. வாடாத முகம், வீழாத குணம் அவர் வழக்கம். அத்தனை தலைவர்களும் மைபா பேனாவுக்கு பழக்கம்.
ஊடக மதிப்புரைகள்
1 2
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : ஜனசக்தி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

மைபா என அழைக்கப்படும் மை.பா.நாராயணனன், தான் பணியாற்றிய பத்திரிகைகளுக்காக அரசியல் கட்சித் தலைவர்களிடம் மேற்கொண்ட நேர்காணல்கள் "சந்திப்பு" என்ற பெயரில் இப்போது நூலாக வெளிவந்துள்ளது. தற்போதய முதல்வர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், சுப்பிரமணியசாமி, திருமாவளவன், தமிழருவி மணியன், சுப.வீரபாண்டியன், சரத்குமார், டி.ராஜேந்தர், உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பேட்டியின் தொகுப்பாக இந்நூல் வந்துள்ளது. கடந்த சில ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றின் ஒரு பகுதியை இந்நூல் பதிவு செய்துள்ளது என்றே கூறலாம். - - - 2008.04.06 - - -

1 2

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan