தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மறந்துபோன பக்கங்கள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
ஸ்ரீராம், செங்கோட்டைsenkottaisriram@gmail.com
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
Telephone : 914442139697
விலை : 75
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 224
ISBN : 9788189936495
புத்தக அறிமுகம் :
பலரும் மறந்துபோய்விட்ட ஆனால் மறக்கக்கூடாத செய்திகள் தற்கால வாழ்வியல் நோக்கில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. வீரன் வாஞ்சிநாதன், அமரகான படைத்த எஸ்.ஜி.கிட்டப்பா, கணித மேதை எஸ்.எஸ்.பிள்ளை என்று மாமனிதர்களைப் பற்றிய பதிவுகள். இளந் தலைமுறையினர் நினைவில் பதிந்து கொள்ள வேண்டியவை. ஆழ்வார்கள் காட்டிய அமுதத் தமிழும் கம்பனின் கவிதை நயமும் ரசிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. சின்னச் சின்ன கதைகள் மூலம் மேலாண்மைத் தத்துவங்கள் காட்டப்படுவது வித்தியாசமான நோக்கு.
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : கலைமகள்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

மறக்கக் கூடாத மனிதர்களையும், வாழ்வியல் நெறிகளையும் உயர்ந்த நோக்கங்களையும் நினைவுபடுத்தும் நூல். மண்ணின் மனிதர் வீரன் வாஞ்சிநாதன் பற்றிய கட்டுரை அன்று இயங்கிய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளையும் பாரதமாதா சங்கம் பற்றிய தகவல்களையும் தருகிறது. இன்றைய புதுமணத் தம்பதிகளுக்கு அறிவுபூர்வமான சிந்தனைகளைத் தந்து மன(ண) முறிவு ஏற்படுவதைத் தவிர்க்கிறது மந்திர நுட்பம் என்ற தலைப்பில் அமைந்த கட்டுரைகள். தேவை நேர்முகச் சிந்தனை என்ற சிறிய கட்டுரை சீரிய சிந்தனைகளை விதைத்து இறைவனுக்கும் நமக்கும் பாலம் போடுகிறது. எல்லைதாண்டிய நடனம் கட்டுரை பள்ளி விழாக்களில் கவனம் வேண்டும் என்று எச்சரிக்கை செய்கிறது. சாப்பாடு தேவாமிர்தம் என்ற கட்டுரை விருந்துக்குச் செல்லும் போதெல்லாம் நினைவிற்கு வரும். அத்துடன் ஊத்துமலை ஜமீனும் நினைவிற்கு வரும். "சொல்லமாட்டேன் அடியேன்.. " என்ற கட்டுரை தமிழ் நாட்டில் தமிழர்களின் இழிநிலையைச் சொல்கிறது. "அறிவியல் காட்டும் ஆன்மிகம்" என்னும் கட்டுரை இந்து மதத்தின் பெருமையை உலக அறிஞர்கள் வாயிலாகச் சொல்கிறது. இலக்கியம், பண்பாடு, ஆன்மிகம், நடைமுறை வாழ்வியல் சிந்தனை, தேசியம், தெய்வீகம் உள்ளிட்ட முப்பத்தைந்து கட்டுரைக்ளைக் கொண்ட மறக்காமல் வாங்கி, மறக்காமல் படிப்பது ஆயிரம் இனிய அனுபவல்களைத் தரும். - - - - டிசம்பர் 2007 - - - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan