மருத்துவத் தமிழ் ஆய்வு மாநாட்டில் படித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சித்த மருத்துவ முறைகள், தமிழ் நூல்கள் வழங்கிய மருத்துவக் கொடை, மூலிகை மருத்துவமும், உணவு வகைகளும், தமிழர் கண்ட மருத்துவம், மருத்துவக் களஞ்சியம் என்ற வகைப்பட்டின் கீழ் 98 அறிஞர்கள் இதில் கட்டுரை எழுதியுள்ளனர்.
நமது முன்னோர் மருத்துவ உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளனர். இந்தக் கட்டுரைகளின் மூலம் நமக்கு பல புதிய செய்திகள் கிடைத்துள்ளன. கலை, இலக்கியங்களில் சிறப்புற்ற பண்டைய தமிழர்கள், மருத்துவக் குறிப்புகள் பற்றி கூறியுள்ள கருத்துக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
திருநூற்றுப் பச்சை சளி, கபம் போக்கும், சோற்றுக் கற்றாழை உடல் வெப்பத்தைத் தணிக்கும், கரிசலாங்கண்ணி காமாலை, ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும், வல்லாரை நினைவாற்றலைப் பெருக்கும். மணத்தக்காளி அல்சர், ஈரல் நோய்களை ஒட்டும், தூதுவளையால் நரம்புத் தளர்ச்சி மறையும். வாழைத்தண்டு சிறுநீரக கல்லைக் கரைக்கும். அறுகம்புல்லால் கொலஸ்டிரால் கட்டுப்படும் இப்படி பல தகவல்கள், கட்டுரையாளர்களின் உழைப்பு இந்நூலில் மிளிர்கிறது.
- - - தினமலர் 22-01-2006 - - -