"பெரிய பெரிய
ஆலயங்கள்
கும்பிட மனமில்லை
பள்ளிக்கூடம் இல்லாத
ஊர்"
என்பது போன்ற சமூக உணர்வுத் தெறிப்புகள் நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன பாரதி ஜிப்ரானின் "மழை தினத்தில்"
முன்னுரையில் மு.முருகேஷ் சொல்வதுபோல, கவிஞனுக்குள் உள்ள குழந்தைத்தனமும், மலரினிம் மெல்லிய ஈரமனமும், கீழ்மைகளைக்கண்டு
கொதிக்கின்ற உள்ளமும், இயற்கையின் மீதான காதலும் கவிதைகளில் வெளிப்படுகின்றன.
"மழை எப்போதும்
உன்னை மகிழ்விக்கிறது
இப்போதெல்லாம்
மழையோடு என்
மகிழ்ச்சியும் திசைமாறிப்
போய்விட்டது
மரங்கள் குறையும் இந்தப்
பூமியில்"
என்கிறார் கவிஞர்.
தமிழ் ஹைக்கூவிற்கு ஒரு செறிந்த வரவு.
- - - மே 2004 - - -