தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நெஞ்சத்தில் ஹைக்கூ
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
இரவி, இராeraeravik@gmail.com
பதிப்பகம் : ஜெயசித்ரா
Telephone : 914522631505
விலை : 25
புத்தகப் பிரிவு : ஹைக்கூ கவிதைகள்
பக்கங்கள் : 64
புத்தக அறிமுகம் :
ஊடக மதிப்புரைகள்
1 2 3
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : இனிய நந்தவனம்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : கவிஞர் பீர்முகமது, சந்திரசேகரன்

இது ஹைக்கூ காலம். இன்று இளந்தலை முறையினரால் மிகவும் உற்சாகமாக ஹைக்கூக்கள் எழுதப்படுகிறது என்று ஹைக்கூ கவிஞர்களை உற்சாகப்படுத்தும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் அணிந்துரையுடன் கவிஞர் இரா. இரவியின் சமீபத்திய வெளியீடாய் வெளி வந்திருக்கிறது நெஞ்சத்தில் ஹைக்கூ என்ற கவிதை நூல். நூலின் கட்டமைப்பும் முகப்பு அட்டையும் மிகவும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ளது. கண்ணில் படுகின்ற எல்லாவற்றையும் கவிதைகளாய் வடித்திருப்பது பாராட்டக்கூடியதே. ஆனாலும் சில கவிதைகள் தான் மனதில் நிற்கும்படி அமைந்துள்ளன. சில கவிதைகள் தினசரி செய்தித்தாள்களின் தலைப்பைப் போலவே வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. இதைத் தவிர்த்திருக்கலாம். சொல்ல வந்த கருத்து சிறப்பாக இருந்த போதிலும் வார்த்தைகளை இன்னும் செரிவுபடுத்தி இருக்கலாம். நிறைய கவிதைகளை தரும் கவிஞர் இரவி, இன்னும் நிறைவான கவிதைகளைத் தர வேண்டும் என்பது என் கருத்து. தருவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. கவிதைகளுக்கென முதல் இணையதளத்தைத் தந்த கவிஞர் இரவியின் கவிதைகளை இன்று உலகத்தமிழர்கள் பலரும் வாசித்து வருகிறார்கள் என்பது இவருக்கு கிடைத்த தனிச்சிறப்பு என்றே சொல்லலாம். - - - ஏப்ரல் 2006 - - -

1 2 3

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan