..விசிறியடிக்கப் பெற்ற விதைகளைப் போலப்பூமிப் பரப்பெங்கும் என் மண்ணின் மகவுகள் மகிழ்வற்றுக் காலம் கழிக்கும் நிலை. முப்படைளின் முறைப்புகளும் உணவு - மருந்துத் தடைகளும் துரோகக் குழுக்களின் துச்சாதனங்களும் என் தாயகத்தின் தேசிய ஆன்மாவை அழிப்பதற்குப் பதில் மேலும் வலுப் பெற வைத்துள்ளன.
..அக்கினி வட்டத்தின் நடுவில் இலவம் பஞ்சு போல இருந்து கொண்டும் விடுதலைக்காகப் பாடு படலாம்.
..சிப்பாய்களின் துப்பாக்கிகளின் கடூரமான குரல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. அதை விழுங்கி விடுவது போல இருக்கிறது மக்களின் அவலக் குரல்.
..பிக்குகளிடையே புத்தர் அறிமுகப் படுத்திய உடை மட்டும்தான் இருக்கு, கொள்கை இல்லை.
..தமிழர் நிலங்களில் சிங்களவ ரைக் குடியேற்றும் நோக்கத்துடன் இராணுவம், காவல்துறை என அனைத்துத் துறைகளும் தமிழரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டன.
..நெடுந்தீவிலும் நெல்லியடியி லும் இருக்கும் சிங்கள இராணுவத் துக்குத் துணைபோகும் துரோகக் குழு ஒன்றை வெளியேறச்சொல்லி மக்கள் போராட்டம் நடத்துகிறார்க ளாம்.
..ஓர் இரவில், காதல் மனைவியை யும், சோகத்தையெல்லாம் மறக்கச் செய்யும் புன்னகைக்குச் சொந்தமான மழலையையும், விட்டுப் பிரிந்து மக் களுக்காகப் பாடுபடப் புத்தர் புறப் பட்டாரே! அம்மாவையும் மூன்று தங்கைகளையும் பிரிவது இவனுக் குச் சொர்க்கத்தை விட்டுத் தூக்கி எறிவதைப் போல.
..நிர்வாணமாகத் தலைகீழாகக் காயப்பட்ட உடலுடன் மிளகாய்த் தூள்ப் புகையுடன் போராடிக் கொண் டிருப்பான்.
..திரும்பவும் சண்டை வந்தால் எத்தனை பேரை உங்கடை அம்மா ஆட்கள் கொல்லுவினமோ தெரியாது. எங்கடை ஆட்கள் எத்தனைபேர் படிப்பைவிட்டிட்டு, குடும்பத்தை விட்டிட்டு இயக்கத்தில் சேருவினமோ தேரியாது.
..இந்த நாடு அடுத்தவங்களின்ரை கைக்குப் போனால் தங்கடை வருங் காலச் சந்ததி கஷ்டப்படும் என்று நினைக்கிறாங்கள். இவங்கள் நினைக்கிற மாதிரி எங்கடை பழைய ஆக்கள் நினைச்சிருந்தால், நாங்கள் ஏன் அந்நிய நாடுகளில் அகதியா அலையிறம்? உலங்கு வானூர்திகளில் சமாதான தூதுக்குழுவினர் வருகினமாம், சமாதானம் வருகுதாம், பார்க்கப் போறன்.
..அவ்வைக்கு உணர்ச்சிப் பெருக்கு. அம்மா நல்லா மெலிஞ்சிட்டீங்க என்று சொல்ல வேண்டும் போல இருந்தது. உடனடியாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். நான் ஒரு பொறுப்பாளர். மற்றப் போராளி களுக்கு முன்னுதாரணமாய் இருக்க வேணும்.
..மனுசன் இன்னும் மிருகமாத் தானே இருக்கிறான். தன்ரை இனத்தை எப்படி விதம் விதமாக் கொல்ல லாம்? எப்படி விதம் விதமாய்ச் சித்திரவதை செய்யலாம் என்று கண்டுபிடிக்கிறதுக்குத் தன்ரை அறிவைச் செலவழிக்கிறான். ..அது எங்கடை நிலம், எங்கடை கோயில், இவன் ஆர் என்னைச் சோத னை போட்டுக் கும்பிட அனுப்புவ தற்கு? அடிமைப்பட்டிருக்கிற கோயில் வேண்டாம். இப்பிடியே செத்துப் போறேன். அடுத்த பிறவி இருந்தால் வந்து பார்க்கிறன்.
..வழக்குகள் இல்லாமலேயே சிறை வாசம் என்பது எவ்வளவு மோசம்? இதைச் சிறை என்று அழைப்ப தில்லை. சிறப்பு முகாம் என்கிறார்கள். அப்படி என்ன சிறப்போ? மேற்காணும் வரிகள் யாவும் சாந் தன் எழுதியவை. மனம் எனும் தோணி பற்றி, உலகெங்கும் பயணித்திருக்கிறார் சாந்தன், உள்ளங் களுள் பயணித்திருக்கிறார் சாந்தன். நோர்வே, தாய்லாந்து எனப் பல நாடுகள், அந்தந்த நாட்டுச் சூழ் நிலைகள், சிங்கள, புத்த உணர்வு கள், மெய்நிலைகள் வரலாற்றுப் பின்னணிகள் யாவும் கற்றறிந்த மேதையாகி, 20 கதைகளை, நான்கு சுவர்களுக்குள் ஞானத்தையே சிறை வைத்திருக்கும் சாந்தன் இந்த நூலில் தந்துள்ளார். ஒவ்வொரு கதையிலும் கண் ணீரை வரவழைக்கும் உணர்ச்சிப் பிழம்பான, தேசியப் பற்றுள்ள நிகழ்ச்சி ஒன்றாவது இருக்கும். தமி ழீழத்தின் சமகாலச் சிந்தனையோட் டத்தின் மறுபதிப்பு. சமகால நிகழ்வு களை இலக்கியமாக்கிய இந்தக் கதைகள் பரிசுகளுக்குரியன, வாசகர் அனைவரும் படிக்கவேண்டியன.