கிளி நொச்சி மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் இவரது பணி மகத்தானது. செல்லையா மாஸ்ரர் என்று எல்லாராலும் அழைக்கப்படும் இவரது பணிக்காலத்தில் மாவட்ட கல்வி வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டவர். அறிவியல் பட்டதாரியான இவர், பல்வேறு துறைகளிலும் ஆற்றல் பெற்று விளங்கினார். கேட்கட்டும் குறளின் குரல் என்ற தலைப்பில் 3 தொகுதிகளாக திருக்குறளுக்கு முழுமையான விளக்கம் எழுதியுள்ளார். புலம் பெயர்ந்து கனடாவில் வசித்த காலங்களிலும் தமிழுக்காக பணியாற்றினார். அண்மையில் இவர் கனடாவில் காலமானர்.