இவர் தனது இளங்கலைமாமணிப் பட்டத்தினை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தினை மாஸ்கோப் பல்கலைக் கழகத்திலும் பெற்றவராவார். நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், விமர்சன மெய்யில், விமர்சன் முறையியல் இருபதாம் நூற்றாண்டின் ஓவியக் கொள்கைகள், அழகியல், சைவசித்தாந்த அறிவாராய்ச்சியியல் ஒர் அறிமுகம், சைவசித்தாந்தம் - மறுபார்வை, தற்கால யாழ்ப்பாண ஓவியங்கள் போன்ற பல ஆய்வு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். காசிவாசி செந்திநாதையரின் சிவஞானபோத வசனாலல்கார தீபம், ஹிரியண்ணாவின் இநிதிய மெய்யில் போன்ற முக்கிய நூல்களையும் செவ்விதாக்கி வெளியிட்டுமுள்ளார். தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தத்துவத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.