மாநிலக் கல்லூரியில் பல்லாண்டுகள் தமிழ்ப்பேராசிரியராகவும், பூண்டி புஷுபம் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் முதுகலைப் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும்,பனாரசுப் பல்கலைக்கழகத்தில் ஈராண்டுகள் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் தமிழ் இணையப் பல்கலைகழகத்திலும் பணியாற்றியவர். ஒப்பியல் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட இவர், தமிழ்-மலையாள சமூக நாவல்களைப் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஒப்பியல் இலக்கியம் பற்றிய இருபதிற்கும் மேற்பட்ட அகில இந்திய கருத்தரங்குகளில் கலந்துகொண்டதோடு பல ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியுள்ளார். மலையாளம், சமஸ்கிரதம், செர்மன் ஆகிய மொழிகளைக் கற்றுள்ளார். ஆங்கிலத்திலும் தமிழிலுமாக பத்து நூல்களை வெளியிட்டுள்ளார். டாக்டர் அ.சிதம்பரநாதன் அவர்களின் "செங்கோல் வேந்தர்", "தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்" ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார்.