திராவிடக் கவிமணி பட்டம் பெற்ற பெரும் புலவர் வே.முத்துசாமி அவர்களின் புதல்வர். கோதண்டராமன் என்னும் இயற்பெயர் கொண்டவர். 1948 இல் காந்தி இறந்தபோது "காந்தி பிள்ளைத் தமிழ்" பாடியுள்ளார். சுவடிகளில் இருந்து நூல்கள்ப் பதிப்பித்தவர். இன்றைக்கும் 25 ஆண்டுகளாக சுவடி பயில்வோருக்கு ஆதரமாக இருக்கும் "சுவடிப் பயிற்சிக் கையேடு" என்ற நூலையும் எழுதியுள்ளார். இவரிடம் சுவடி கற்ற மாணவர்களே இன்று பல்வேறு இடங்களில் சுவடிப் பதிப்பாளர்களாக உள்ளனர்.