உடத்தலவின்ன சிந்தனை வட்டத்தின் தாபகரும் முகாமைத்துவ பணிப்பாளருமான கலாபூஷணம் பீ.எம். புண்ணியாமீன் அவர்கள் 240 இற்கும் அதிகமான நூல்களை வெளியிட்டு மலையகத்தில் மின்னணிப் பதிப்பாளராக திகழ்கிறார். நூல்களை வெளியிடுவதுடன் மாத்திரம் தனது பணியினைச் சுருக்கிக் கொள்ளாமல் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தமிழ் வளர்க்கும் மூத்த எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் நிறுவன ரீதியில் பாராட்டிக் கௌரவித்து வருவது இவருடைய விசேடமான ஒரு குணமாகும்.