மலேசிய தமிழ் இலக்கிய வானில் ஏறத்தாள 40 ஆண்டுகள் சிறகடித்துப் பறந்துகொண்டிருக்கும் கவிக்குயில். தந்தை பெரியாரின் தீவிர பக்தர். தமிழ் முரசு மாணவர் மணிமன்றம் இதழின் வழி எழுதத் தொடங்கிய இவர் இன்றுவரை சழைக்காமல் எழுதிக்கொண்டு இருக்கிறார். சாமிக்கண்ணு என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த போதிலும் கோவிமணாளன், அஞ்சலை, அஞ்சலை மணாளன், சௌக்கடி, ஏவுகணை ஆகிய பெயர்களில் இவரின் எழுத்தாற்றல் புலப்படுகிறது.