ஈரோடு மாவட்டம், புஞ்சைப் புளியம்பட்டியில் 1940 இல் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். 1960 ஆம் ஆண்டு தஞ்சை சரபோஜி கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் தொடங்கி 36 ஆண்டுகள் ஆசிரியப் பணிக்குப் பின் ஓய்வு பெற்றிருக்கிறார். புகழ் பெற்ற தமிழ் - ஆங்கில இதழ்களில் கதை, கட்டுரை, திறனாய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். நாடகத்துறையிலும் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். பல்வேறு இலக்கிய அமைப்புக்களில் இணைந்து பணியாற்றி வருகிறார். வள்ளலார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அவற்றைப் பரப்புவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.