ஈழத்தமிழர் பிரச்சனையில் ஈடுபாடுள்ள தமிழகத் தமிழர்களிடையே பரவலாக அறியப்பட்ட பெயர் "சுந்தர்", அந்த சுந்தரின் சொந்தப் பெயர் கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ். சமுதாய ஏற்றத் தாழ்வும், வைதீக முரண்பாடுகளும் முற்றாக நீங்க வேண்டும் என்பதில் செயல்பற்று மிக்கவர். புலம்பெயர் வாழ்வில் "மௌனம்" காலாண்டிதழின் தொகுப்பாளர். அப்பால் தமிழ் என்னும் இணைய இலக்கிய இதழின் தளகர்த்தா. "முகம் கொள்", "இனியொரு வைகறை" என்ற இரு கவிதை நூல்களை எழுதியுள்ளார்.