பெர்ம்புலவர் வி.அ.அரங்கசாமியின் மகனான இவர், பூண்டி அ.வீ.வா.நி. திரு புட்பம் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வின் பின்னர், தற்சமயம் சேலையூர் பாரத் உயர்கல்வி ஆரய்ச்சி நிறுவனத்தில் இரசாயனம் பிரிவின் தலமைப் பொறுப்பாளர் ஆக பணியாற்றுகிறார். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் அறிவியல் அரும்பணி விருதினைப் பெற்றவர். வேதியில், உயிர் வேதியல், வேளாண் வேதியல், சுற்றுப்புற வேதியல் - மாசுக் கட்டுப்பாட்டு கருத்துக்களைச் சொல்லாலும், எழுத்தாலும் மக்கள் தொடர்புச் சாதனங்களாலும் படித்தவர்களுக்கும் பாமரர்களுக்கும் புரியும் வகையில் எளிய முறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிய அஅறிவியல் அரும்பணிக்காக தமிழ்நாடு அரசு இவ்விருதினை வழங்கியுள்ளது. இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடுகளில் நூற்றிக்கும் மேற்பட்ட அறிவியல், இலக்கிய, வேளாண் கடிதப் பத்திகளையும் இவர் எழுதியுள்ளார்.