யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று தனது இளங்கலை, முதுகலை கலாநிதிப் பெற்றுள்ளார். தற்போது கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மொழித்துறையில் தமிழ் முதுநிலை விரிவுரையாளராகவும், முதுகலை பட்ட இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். சங்க இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், பெண்ணிய விமர்சனம், நாடக இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் ஈடுபாடுடையவர். இவைகள் தொடர்பான கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். பேராசிரியர் கா.சிவத்தம்பியின் "Drama in Ancient Tamil Society" என்ற ஆங்கில நூலினை பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் என மொழிபெயர்த்துள்ளார்.