ஈழத்தில் பொதுவுடைமைப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தோரில் தரமான நாவல்களைத் தந்தவர். நாவல், சிறுகதை ஆகிய ஆக்க இலக்கியத் துறைகளில் மட்டுமல்லாது சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் 50 இற்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குமரன் என்ற மாத இதழை ஆரம்பித்து பொதுவுடைமைக் கருத்துக்களுக்கான களமாக அதனைச் சில ஆண்டுகள் வெளியிட்டுள்ளார். இலங்கையிலும் இந்தியாவிலும் குமரன் பதிப்பகத்தை ஆரம்பித்து அதன் மூலம் பெருமளவு தரமான நூல்களைப் பதிப்புத்துள்ளார்.