முனைவர் தங்கராஜ் அவர்கள் தற்போது டாக்டர் அம்பேத்கார் பொருளியில் ஆய்வு மையத்தில் துறைத்தலைவராகப் பணியாற்றி வருகிறார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். தலித் சமூக மேம்பாடு, நிலப்பகிர்வில் ஏழைகளுக்கான பங்கு, நிலத்திற்கும் சாதிக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் தொடர்ந்து எழுதி வருபவர். தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை எதிர்த்தும் அவர்களுக்கு வேண்டிய சட்டப்பாதுகாப்பு, கல்வி பொருளாதார தேவைகள் குறித்தும் அக்கறை உள்ளவர்.