சேலத்தைச் சொந்த ஊராகக்கொண்டு 1975 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 13வது வயதில் நிகழ்ந்த ஒரு விபத்தால் உடல் ஊனமடைந்தபோதிலும் தற்போது ஒரு தையற் கலைஞராக பணியாற்றி வருகிறார். கவிதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்று தனது படைப்புக்கள் மூலமா சேலம் இலக்கிய வட்டத்தில் வலம் வரும் இவர் இனிய நந்தவனம், உதவிக்கரம், தன்னம்பிக்கை, ஊன்றுகோல் போன்ற இதழ்களின் சிறப்புச் செய்தியாளராக செயல்பட்டு வருகிறார். தனது முதல் நூலை 2004 இல் இவர் வெளியிட்டுள்ளார்.