ரசிகமணி டி.கே.சி இன் பேரனான தீப.நடராஜன், ரசிகமணியின் தலைசிறந்த வழித்தோன்றலாகவும், ரசாகமணியின் அரய தமிழ்ப்பண்புகள் அனைத்தையும் பேணி வளர்ப்பவராகவும் திகழ்கிறார். தமிழ் இலக்கியத்தில் மட்டுமன்றி தமிழிசை, நடனம், நாடகம் முதலிய துறைகளிலும் மிகுந்த ஆர்வமும் ஞானமும் உடையவர். மகாகவி கம்பன் முதல் இலக்கியமேதை புதுமைப்பித்தன் வரை ஆராய்ந்து பயின்றவர். நடுநிலையோடு எந்தக் கலை இலக்கியத்தையும் எடைபொடும் ஆற்றல் பெற்றவர், திறனாய்வாளர். தன்னடக்கம் மிக்க, விளம்பரத்தை விரும்பாத இன்றைய தமிழ்ப்படைப்பளிகளில் இவரும் ஒருவர். இவரது தமிழ் நடை தனித்துவமும் உயிர்த்துடிப்பும் கொண்டது. ''கதைசொல்லி'' இதழிற்கும் இவர் தனது பங்களிப்புகளை செய்துவருகிறார்.