பாவாணர் மொழித்துறையில் கிட்டத்தட்ட தமிழகம் பெற்றெடுத்த ஒரே ஒர் அறிஞர் என்று கூறத்தக்கவராவார். அவருடன் பக்கத்திலோ, சற்றுத் தொலைவிலோ வைத்து ஒப்பிட எண்ணக்கூடத் தமிழகம் மொழித்துறையிலே இன்னும் ஒரு அறிஞனைப் பெற்றுத்தரவில்லை...... அவர் இயந்திர அறிஞர் அல்லர்; சோற்றுக்குத் தக்கபடி நாளமிடும் கூலி அறிஞரும் அல்ல்ர்; தமிழினத்தின் உயர்வு உணர்ந்தவர்; அதில் பற்று உள்ளவர்; மொழிநூல் கற்றவர் மட்டுமல்ல, மொழிநூல் கற்பிப்பவர்; இயற்றுபவர் மட்டுமல்ல், மொழிநூலை ஆக்கும் சிந்தனை அறிஞர். - - - பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் - - -