சிறுகதைகளை இவர் சிருஷ்டிப்பதைப்போன்று மற்றவர்கள் செய்யவே முடியாது. ஈழநாட்டிற்குப் பெருமை தரக்கூடியவர் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை. ஈழத்துச் சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிடவிரும்பும் எவரும் இவருடைய "தோணி" யை விட்டு விட்டு ஒரு தொகுதியை வெளியிடமுடியாது. நிதர்சன இலக்கியம், வாழ்க்கையோடு ஒட்டிய இலக்கியம் என்று துடிப்பாய்த் துடிக்கும் முன்னேற்ற எழுத்தாளர்கூட அதியப்படும் படியானவை இவரது சிறுகதைகள். - - - இரசிகமணி கனக செந்திநாதன் - - - வ.அ புனைகதைத் துறையில் ஈடுபாடு கொண்டு இன்றுவரை ஓர் அரை நூற்றாண்டு காலம் எழுதி வருபவர். எழுதாமல் இருப்பது என்பது அவரால் இயலாத காரியம். தமது சிறுகதைத் தொகுதிக்கு அன்றே சாஹித்திய மண்டலப் பரிசு பெற்றவர். மூதூர் மக்களின் வாழ்க்கை அனுபவங்களை எழுத்தில் கொணர்ந்த முன்னோடி. இத்தனைக்கும் மேலாக நேர்மையும், உண்மையும், மனிதாபிமானமும் மிக்க ஒரு படைப்பாளி. - - - கலாநிதி மௌனகுரு - - -