"குறமகள்" திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர். சிறுகதைத் துறையில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றிருப்பவர். பெண்களின் சமூக விடுதலைக்கான கருத்துக்களைத் தன் சிறுகதைகளில் பொறிக்கம் பொழுது, குடும்ப உறவின் பிணைப்பு அறாமல் வலுப்படும்படி பொறுப்புடன் எழுதுபவர்.