60கள் முதல் 90கள் வரை ஈழத்து இலக்கியத்தில் வலுவான இடத்தை அடைந்தவர் ஏஜே. குறிப்பாக அவரது மொழிபெயர்ப்புகளும் விமரிசனக்களும் சிறப்பு வாய்ந்தவை. பல ஈழத்து, தமிழக எழுத்தாளர்களின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். பல ஆங்கிலக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்தவர். யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றி பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழித்துறையில் கடமையாற்றினார்.