தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படும்பொழுது அதிலே கவிஞர் த.பழமலய்க்கும் நிச்சயமான ஓர் இடம் உண்டு. கவிஞர் பழமலாய் மக்கள் இயக்கத்திலே இணைந்து மனித நேசிப்பினை உள்வாங்கிக் கொண்டார். கிராமிய மண்ணிலே வேர் கொண்ட எளிமையை ஆட்சிப்படுத்தினார். சாதாரண மக்கள் வாழ்க்கையில் ஏற்படும், சட்டென்று கண்களுக்குப் புலனாகாத, சிறு சிறு சலனங்கள் கூட கவிதைகளுக்கான உயிர்ப் பொருளாகப் பழமலய் வசப்படுத்தினார்.